qகேரளாவுக்காக ஊதியத்தை வழங்கிய இந்திய அணி!

Published On:

| By Balaji

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இந்திய கிரிக்கெட் அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஊதியம் முழுவதையும் வழங்கவுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) நிறைவடைந்தது. முதலிரண்டு போட்டிகளின் அனுபவத்தைக்கொண்டு இந்தப் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. போட்டியின் முடிவில் இந்த வெற்றியைக் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. அத்துடன் இந்தப் போட்டியின் மொத்த ஊதியத்தையும் கேரள மக்களுக்கு வழங்குவதாகவும் அறிவித்தார். மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் கோலியின் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சர்யத்தில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். ABP ஊடகத்தில் வெளியாகியுள்ள தகவலின் மூலம் இந்திய அணி அறிவித்துள்ள ஒருநாள் ஊதியத் தொகை சுமார் 1.26 கோடி என்பது தெரியவந்துள்ளது.

வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக கேரளாவில் இதுவரை சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருட்சேதங்களும், 400 உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதிலிருந்து மீண்டுவந்து கேரளா மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து நிவாரணத் தொகை வந்து கொண்டிருக்கின்றன. முன்னதாக கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாகித் அஃப்ரிடி, சஞ்சு சாம்சன், பதான் சகோதரர்கள் ஆகியோர் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share