கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியஸின் கடைசி சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து தனுஷ், த்ரிஷா தங்கள் வருத்தத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டினால் 1992ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘எ சாங் ஆப் ஐஸ் அண்ட் பயர்’ நாவல்களின் தொகுப்பை தழுவி உருவாக்கப்பட்ட அமெரிக்க ஃபேண்டஸி ட்ராமா தொடர் கேம் ஆஃப் த்ரோன்ஸ். எச்பிஓ தொலைக்காட்சி நிறுவனத்திற்காக டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி.வேய்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த தொடர் 2011ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள எட்டு சீஸன்களில் ஏழு முடிவடைந்த நிலையில், சென்ற மாதம் முதல் இதன் கடைசி சீசன் ஒளிபரப்பானது. நேற்று(மே 20) வெளியான இதன் கடைசி எபிசோட் நிறைவடைந்தவுடன் ரசிகர்கள் தங்கள் ஆதர்ச கேம் ஆப் த்ரோன்ஸ் குடும்பத்திற்கு பிரியாவிடையளித்தனர். பல முக்கியமான கதாபாத்திரங்கள் இறந்ததையொட்டி ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு திரை நட்சத்திரங்களும் தங்கள் வருத்தத்தையும் பிரிவையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தனுஷ், த்ரிஷா இருவரும் இதன் தீவிரமான ரசிகர்களாக இருந்து வந்துள்ளனர். அவர்களும் தங்கள் பிரியாவிடையை கேம் ஆஃப் த்ரோன்ஸ்க்கு டிவிட்டர் பதிவின் மூலம் அளித்துள்ளனர்.
**தனுஷ்**
இந்த சீசன் 8ல் கலவையான உணர்ச்சிகள் இருந்தாலும், குறிப்பாக இந்த இறுதி எபிசோட், உண்மையிலேயே ஒரு சகாப்தத்தின் முடிவு. கேம் ஆஃப் த்ரோன்ஸ், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு கடினமான குட்பை தான். எழுத்து மற்றும் பொழுதுபோக்கில் புதிய தரங்களை அமைத்ததற்காக இதை உருவாக்கியவர்களுக்கு நன்றி.
**த்ரிஷா**
சிறந்த நடிப்பு, காட்சியமைப்புகள், இசை மற்றும் மிகவும் அற்புதமாக எழுதப்பட்ட காட்சிகளால் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒரு கல்ட் ஷோவாகவே எப்போதும் நினைவில் இருக்கும்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
**
[சென்னை: மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/9)
**
.
.
�,”