பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் போது கூட்டலில் தவறு செய்ததாக 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவைத் தொடர்ந்து மதிப்பெண் குறைவாகப் பெற்றுள்ள மாணவர்கள் விடைத்தாள் நகலை வாங்கி பார்த்துள்ளனர். அப்போது விடைத்தாள் திருத்தும் போது கூட்டலில் தவறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, 100க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாகவும், 81 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு சில விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. இதுபோன்று 30 சதவிகித விடைத்தாளில் கூட்டல் தவறாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த தவறு குறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஏற்பட்ட பிழைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் பேரில் விடைத்தாள் திருத்தலின் போது கவனக் குறைவாக இருந்ததாக 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/27/68)
**
.
**
[திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?](https://minnambalam.com/k/2019/05/28/29)
**
.
**
[தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/05/28/27)
**
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)
**
.
.�,”