Qகிராமத் தலைவரானார் திருநங்கை!

public

இந்தியாவின் முதல் திருநங்கை கிராமத் தலைவராக, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய தியானேஸ்வர் சங்கர் காம்ப்ளே என்கிற மௌலி என்பவர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒர் திருநங்கைக்கு வாய்ப்பு அளித்து, அவரை வெற்றியும் பெறச் செய்துள்ள அந்த கிராம மக்களின் செயலுக்கு பல சமூகச் செயல்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தும் பாராட்டியும் வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் 3000க்கும் மேற்ப்பட்ட மக்கள் தொகை கொண்ட சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள தரங்ஃபால் கிராமத்தில் என்னும் கிராமத் தலைவருக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் பிஜேபி வேட்பாளராக திருநங்கை தியானேஸ்வர் காம்ப்ளேயும் காங்கிரஸ் வேட்பாளராக ஜேசிங் சல்வேயும் போட்டியிட்டனர். பதிவான 2,400 வாக்குகளில் 854 வாக்குகளைப் பெற்று த்னானேஷ்வர் வெற்றி பெற்று கிராமத் தலைவராகப் பதவி ஏற்றார்.

தன் வெற்றி பற்றி தியானேஸ்வர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காங்கிரஸ் போட்டியாளரைக் காட்டிலும் கல்வி அறிவும், அரசியல் அனுபவம் எனக்கு மிகவும் குறைவு. இருந்தும் கிராம மக்கள் முழு மனதுடன் என்னை நம்பி வாக்களித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் தேர்தலிலேயே என்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு என் நன்றியை இந்த கிராமத்தின் வளர்ச்சியின் மூலம் தெரிவிப்பேன்” என்று கூறினார். மேலும், என்னைப் போன்ற மாற்றுப் பாலினத்தவரை ஒதுக்காமல் ஓங்கி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே நான் இந்த அரசுக்கு வைக்கும் கோரிக்கை” என்றும் கூறினார். சமுதாயம் எங்களைக் கருணைக் கண்களோடு பார்க்க வேண்டாம். சக மனிதர்களாக நடத்தினாலே போதும். எங்களைச் சமுதாயத்தின் ஒரு அங்கமாக கருதினாலே போதுமானது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றுப் பாலினத்தவர்களின் மனநிலையும் மாறியுள்ளது. அவர்களும் எதையாவது சாதிக்க வேண்டும், பிச்சை, பாலியல் தொழில் போன்றவற்றைச் செய்யக் கூடாது என்று உறுதியான மனநிலையுடன் இருக்கிறார்கள். பலர் தங்கள் அடையாளத்தைக் கொள்ளாமல் உயிர் படிப்பு, மருத்துவம், ஐ.ஏ.எஸ். எனப் படித்துவருகின்றனர். அப்படிப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டையும் மற்ற பாலினத்தைப் போன்று சட்ட அடிப்படை உரிமைகளையும் வழங்க வேண்டும். சமூகத் துறைகளில் உள்ள என்னைப் போன்றவர்களை அரசும் மக்களும் ஊக்குவிக்க வேண்டும், அப்போதுதான் சொந்தக் கால்களில் எங்களால் நிற்க முடியும்” என்றார் தியானேஸ்வர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *