Jகையால் தொட்டு வாயில் இடும்போதே ‘சுர்ர்ர்’ என்று சுண்டியிழுக்கும் சுவை ஊறுகாய்க்கே உரித்தான சிறப்பு. உணவு காம்பினேஷன்களில் தயிர் சாதம் – ஊறுகாய்க்கு ஈடு இணை கிடையாது. ஊறுகாய்களில் ஒரு வாரம் முதல் பல மாதங்கள் வரை பயன்படுத்தக்கூடிய வகைகள் உள்ளன. அந்த வகையில் இந்த மாங்காய் இஞ்சி ஊறுகாயைச் செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஊரடங்கு நேரத்துக்கு உதவும்.
**என்ன தேவை?**
மாங்காய் இஞ்சி – 200 கிராம் (கழுவி, தோல் சீவி, வட்டமாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 4 (வட்டமாக நறுக்கவும்)
சிறிய எலுமிச்சைப்பழம் – 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்)
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
தண்ணீர் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இறக்கி ஆறவிடவும் நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து ஊறவிடவும். ஒருநாள் கழித்துப் பயன்படுத்தலாம். நன்றாக ஊறியதும் ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.
[நேற்றைய ரெசிப்பி: தோசைக்காய் ஆவக்காய் ஊறுகாய்](https://minnambalam.com/public/2020/04/21/3/dosaikai-avakai-pickle)�,