�இது தக்காளி சீஸன். கடந்த வாரம் குறைவான விலையில் கிடைத்த தக்காளி, தற்போதைய சூழ்நிலையில் சற்றே அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஆனாலும் கடைகளில் குவிந்து கிடக்கும் தக்காளியை வாங்காமல் வருபவர்கள் குறைவு. இந்த ஊரடங்கு நேரத்தில் விதவிதமான ரெசிப்பிகளைச் செய்து அசத்த முடியாதவர்களுக்கு இந்த தக்காளி திடீர்ச் சட்னி ஆபத்துக்கு உதவும். மேலும், தக்காளி உணவுகளைப் பெண்கள் சாப்பிடும்போது கருப்பை வாய், மார்பகம் மற்றும் சுவாசப்பை புற்றுநோய்களிலிருந்து தப்பும் வாய்ப்பிருக்கிறது என்கிறது மருத்துவம்.
**என்ன தேவை?**
தக்காளி – 6
குண்டு மிளகாய் – 6
பூண்டு – 3 பற்கள்
புளி – சிறிதளவு
இஞ்சி – ஒரு துண்டு
எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
**எப்படிச் செய்வது?**
தக்காளி, இஞ்சியைச் சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவிடவும். பின்பு மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றையும் எண்ணெயில் வதக்கவும். வதக்கிய இரண்டுடனும் தேவையான உப்பு சேர்த்து மைய அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு தாளிக்கவும். பின்னர் அதை அரைத்த சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: தக்காளி உப்புமா](https://minnambalam.com/health/2020/05/01/3/thakali-uppuma)�,