பிரபல கால்பந்து வீரர் சையது அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு படத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார்.
பிரபல கால்பந்து வீரரும் இந்தியாவின் முன்னாள் கால்பந்து பயிற்சியாளருமான சையது அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவர இருக்கிறது. அதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தியக் கால்பந்து அணிக்கு அஸ்திவாரம் அமைத்த சையது அப்துல் ரஹீம், 1950 முதல் 1963ஆம் ஆண்டில் தான் இறக்கும் வரை இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் செயல்பட்டிருக்கிறார்.
இவர் இருந்த சமயத்தை இந்திய கால்பந்து அணியின் பொற்காலம் என்றே கூறலாம். 1956ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் இந்திய அணியை அரை இறுதிக்கு அழைத்துச்சென்ற பெருமை சையது அப்துல் ரஹீமையே சாரும். அந்தச் சாதனை இந்தியக் கால்பந்து வரலாற்றில் இன்றளவும் பேசப்பட்டுவருகிறது. அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் ஆகியோர் தயாரிக்க அமித் ஷர்மா இயக்கவுள்ளார்.�,