விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்ததற்குப் பின் காஜல் அகர்வால் நடிப்பில் வேறெந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. தற்போது அவர் நடிப்பில் ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகவுள்ளன.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து தனது மார்கெட்டை 10 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்துள்ளார் காஜல் அகர்வால். 2017ஆம் ஆண்டு வெளியான மெர்சல் படத்துக்குப்பின் தெலுங்கில் காஜல் அகர்வால் நடிப்பில் அவ், எம்.எல்.ஏ, காவச்சம், சீதா ஆகிய நான்கு படங்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலுங்கில் ஷர்வானந்துக்கு ஜோடியாக நடித்துள்ள ரணரங்கமும், தமிழில் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளன.
ஒன்பது விதமான தோற்றங்களில் ஜெயம் ரவி வரும் கோமாளி படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். சம்யுக்தா ஹெக்டே மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். ரணரங்கம் படத்தில் ஷர்வானந்த் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இதுகுறித்து காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு படங்களின் புகைப்படங்களையும் பதிவேற்றி, ‘கோமாளியும், ரணரங்கமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாவது இரட்டிப்பு மகிழ்ச்சி’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதுதவிர அவர் நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் விரைவில் அதன் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**
�,”