�
வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசை அளித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.
பாலிவுட்டின் பிரபலத் தம்பதி அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு தமிழ், இந்தியில் திரைக்கு வந்த குரு திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்திருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அதற்குச் சில ஆண்டுகள் கழித்துத் திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியினர் நேற்று (நவம்பர் 16) தங்களது மகள் ஆராத்யா பச்சனின் 7ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினர்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், “குழந்தையின் பிறந்தநாள் அவளின் தாயைக் கொண்டாடாமல் முடிவடையாது. மகளுக்கு பிறப்பை அளித்ததற்கு, அவளின் மேல் அன்பைச் செலுத்துவதற்கு, அவளைப் பார்த்துக்கொள்வதற்கு.. எல்லாவற்றுக்கும் மேலான ஆச்சரியப் பெண்ணாக இருப்பதற்கு… என்னுடைய திருமதிக்கு – வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசான நம் மகளை அளித்ததற்கு நன்றி! என்னுடைய தேவதை ஆராத்யாவுக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
�,”