qஎம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கையாளும் யுக்தி

public

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக கட்சியின் பாலமுருகன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியில் கடல் தீபன் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே தொகுதி வேலைகளில் பாதியை முடித்துவிட்டார். தற்போது, வன்னியர், நாயுடு, முதலியார், செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தனித்தனியாக அழைத்து மீட்டிங் போட்டுபேசி, தெம்பூட்டி அனுப்பி வருகிறாராம். இந்நிலையில் தலித் சமுதாய மக்களை கூட்டி அவர், தனி மீட்டிங் நடத்தாமல் இருப்பது சங்கடத்தை உருவாக்கியுள்ளதாம். அந்த சமுதாய மக்கள் மத்தியிலும் திமுக வேட்பாளர் பன்னீர் பேசிவிட்டால், அவரின் யுக்தி அதிக பலனைக் கொடுக்கும் என்கிறார்கள் மாற்று கட்சியினர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *