Qஊடகங்களை எதிர்க்கும் டிரம்ப்!

public

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பும், பின்பும் டொனால்டு டிரம்ப், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பக்கத்து நாட்டு மக்கள் அமெரிக்காவினுள் ஊடுருவ முடியாதபடி சுவர்கள் அமைப்போம் எனக் கூறினார். இதனால் அமெரிக்காவில் வசித்துவரும் வெளிநாட்டு மக்கள் டிரம்ப்மீது ஆழ்ந்த வெறுப்பில் இருக்கிறார்கள். டொனல்டு டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்ததில் இருந்தே பல மாற்றங்கள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பை அமெரிக்க நிறுவனங்கள் தந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார். தற்போது ஊடகங்களுக்கு எதிராகவும் பேசியிருக்கிறார் டிரம்ப். ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது வார விடுமுறையைக் கழிக்க, புளோரிடாவில் உள்ள மார்-ய-லகோ பகுதி இல்லத்துக்குச் சென்ற சிறிது நேரத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற கருத்தை பதிவிட்டுள்ளார். CNN, ABC, CBS போன்ற செய்தி நிறுவனங்களைக் குறிப்பிட்டிருந்த டிரம்ப், போலியான செய்தி ஊடகங்கள் என்று இவற்றை விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘ஒரு நல்ல செய்தியாளர் சந்திப்பை இதுவரை பார்த்ததில்லை என்று ரஷ் லிம்பக் என்ற ஊடகவியலாளர் கூறியிருந்தார். இதை பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். போலி ஊடகங்கள் இதை வித்தியாசமாக, நேர்மையற்ற முறையில் அணுகுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முந்தையை அமெரிக்க அதிபர்கள் பலரும் ஊடகங்களை விமர்சித்துள்ளனர். இருப்பினும் டிரம்பின் விமர்சனம் மிகவும் கடுமையான மொழியில் இருப்பதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *