Qஇந்தியாவை ஆட்கொள்ளும் இணையம்!

Published On:

| By Balaji

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 56 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்தியாவில் 2018 டிசம்பர் மாத நிலவரப்படி, இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 56.6 கோடியாக இருப்பதாகவும், அது 2019ஆம் ஆண்டின் இறுதியில் 62.7 கோடியாக உயரும் எனவும், *கேண்டார்* நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் ஊடுருவல், டேட்டா சலுகைகள் போன்றவற்றால் இந்தியாவில் இணையப் பயன்பாடு ஆண்டுக்கு 18 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த இணையப் பயன்பாட்டாளர்களில் 87 சதவிகிதத்தினர், அதாவது 49.3 கோடிப் பேர் தொடர்ச்சியாக இணையம் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த இணையப் பயன்பாட்டாளர்களில் 29.3 கோடிப் பேர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவும், 20 கோடிப் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். இணையத்தை 97 சதவிகிதத்தினர் மொபைல்போன்களில்தான் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 35 சதவிகித வளர்ச்சியுடன் இந்த ஆண்டின் முடிவில் 29 கோடியாக உயரும் என்று இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாகப் பிகாரில்தான் புதிய இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகமாக (35%) இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாக, ஒட்டுமொத்த இணையப் பயன்பாட்டாளர்களில் 42 சதவிகிதத்தினர் பெண்களாவர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share