Qஅருள்நிதியின் பெஸ்ட் ஆக்டிங்!

Published On:

| By Balaji

அருள்நிதி – மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகும் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். பத்திரிகையாளரான மாறன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படம் பற்றி இயக்குநர் மாறன் பேசும்போது, “இந்தப் படத்தின் மொத்தப் படத்தின் கதையும் இரவிலேயே நடக்குமாறுதான் திரைக்கதை அமைந்திருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்ள, அதைத் தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்குப் போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட்டே திரைக்கதைதான். சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும். ரசிகர்களைச் சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தப் படத்தைப் பற்றி தொடர்ந்து பேசிய அவர், “ரொம்பவே கஷ்டமான ஒரு கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி ஒரு நடிகராக முதிர்ச்சி அடைந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அருள்நிதி, மஹிமா காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும். இந்தப் படம் திரைக்கு வரும் நாளை நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share