மதுரை விமான நிலையத்தில் சரக்குகள் போக்குவரத்து இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
வெளிநாடுகளுக்கான சரக்குகள் போக்குவரத்து அதிகரித்ததின் விளைவாக, 2018-19 நிதியாண்டில் மதுரை விமான நிலையத்தில் சரக்குகள் போக்குவரத்து சென்ற ஆண்டை விட 100 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சிங்கப்பூருக்கு நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்ட பிறகிலிருந்தே இங்கு சரக்குப் போக்குவரத்து மேம்பட்டுள்ளது. அதேபோல, உள்நாட்டு சரக்குகள் போக்குவரத்தும் 40 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த சரக்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் பங்கு மட்டும் 85 சதவிகிதமாக இருந்துள்ளது.
நொறுக்குத்தீனி உணவுகள் 5%, துணிகள் மற்றும் தனிநபர் லக்கேஜ் 10 சதவிகிதப் பங்களிப்பையும் கொண்டுள்ளன. பக்ரைன் நாட்டுக்குக் கடல் உணவுகள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் அதற்கான ஏற்றுமதி வாய்ப்பு இல்லை. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததால்தான் ஏற்றுமதியில் சாதிக்க முடிந்ததாக ஏற்றுமதியாளர்கள் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். சர்வதேச வான்வெளிப் போக்குவரத்து கூட்டமைப்பின் சந்தைப்படுத்தும் திறனாலும் ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
கூடங்குளம் அனல்மின் நிலையத்துக்கான ஏற்றுமதி குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்த ஏற்றுமதி சிறப்பாக இருந்ததாக எக்ஸ்பிரஸ் கூரியர் ஆபரேட்டர் கூட்டமைப்பின் தலைவரான எஸ்.ஏ.சயீத் தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)
**
**
[எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?](https://minnambalam.com/k/2019/06/11/20)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”