உள்கட்டுமானத் துறைக்கான வங்கிக் கடன்கள் 18.5 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2018-19 நிதியாண்டுக் கணக்குப்படி, உள்கட்டுமானத் துறைக்கு 18.5 சதவிகிதம் கூடுதலான அளவில், ரூ.10.55 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது 2012-13 நிதியாண்டுக்குப் பிறகு மிகப் பெரிய அளவாகும். 2018 மார்ச் மாத நிலவரப்படி, உள்கட்டுமானத் துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனின் அளவு ரூ.8.91 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. 2012-13 நிதியாண்டில் வங்கிக் கடன் வளர்ச்சி அதிகபட்சமாக 15.83 சதவிகித உயர்வுடன் ரூ.7.29 லட்சம் கோடியாக இருந்தது. வாராக் கடன் பிரச்சினைகளால் தவித்து வரும் இந்திய பொதுத் துறை வங்கிகள் உள்கட்டுமானத் துறைக்குக் கூடுதல் கடன் வழங்கி மேலும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றன.
உள்கட்டுமானத் துறையில், மின்சாரத் துறைக்கு 9.5 சதவிகிதம் கூடுதலான அளவில் ரூ.5.69 லட்சம் கோடியும், சாலைத் துறைக்கு 12.2 சதவிகிதம் கூடுதலான அளவில் ரூ.1.86 லட்சம் கோடியும் வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. தொலைத் தொடர்பு உள்ளிட்ட இதர துறைகளுக்கான கடன் 53.5 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது. 2018-19 நிதியாண்டில் மட்டும் வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் 13.24 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேநேரம் வங்கிகளில் செலுத்தப்படும் டெபாசிட் 10.03 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
ஒட்டுமொத்த தொழில் துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்கள் 6.9 சதவிகித வளர்ச்சியுடன் ரூ.28.58 லட்சம் கோடியாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
.
�,”