இந்தியாவிலேயே அதிகளவில் ஊதியம் வழங்கும் துறைகளில் நுகர்பொருள் துறை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மனிதவள மேம்பாட்டு சேவை நிறுவனமான ரன்ட்ஸ்டட் இந்தியா, இந்தியாவின் பல்வேறு துறைகளில் ஊழியர்களுக்கு வழங்கும் சராசரி ஊதியம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறை (FMCG) இந்தியாவிலேயே அதிகமாக ஊதியம் வழங்கும் துறையாக முதலிடம் பிடித்துள்ளது. இத்துறையின் ஊழியர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம் ரூ.11.30 லட்சமாக உள்ளது. இது மின்னணு வர்த்தகத் துறையில் வழங்கப்படும் ஊதியத்தைவிட 56 சதவிகிதம் கூடுதலாகும்.
இதைத் தொடர்ந்து, மின் துறையில் ஆண்டுக்கு ஒருவர் சராசரியாக ரூ.9.80 லட்சம் ஊதியமாகப் பெறுகிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ.9.30 லட்சமும், மருந்து மற்றும் சுகாதாரத் துறைகளில் ரூ.8.80 லட்சமும், தொலைதொடர்புத் துறையில் ரூ.8.70 லட்சமும் ஊதியமாகப் பெறுகின்றனர். மூத்த மற்றும் நடுத்தர தகுதி ஊழியர்களுக்கான பிரிவில், மின்னணு வர்த்தகத் துறை ஆண்டுக்கு முறையே ரூ.34 லட்சம் மற்றும் ரூ.13 லட்சம் ஊதியமாக வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. எனினும், ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.7.2 லட்சம் ஊதியமாக வழங்கி 13ஆவது இடத்தில் உள்ளது.�,