gபிப்ரவரி 14: காதலர் தினமா, கறுப்பு தினமா?

public

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர். விரும்பியவர்களுக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுப்பது, எப்படி மகிழ்விப்பது போன்ற யோசனைகளிலேயே இரவில் பலர் உறங்கியிருக்க மாட்டார்கள். காதலர்கள் மட்டுமின்றி ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருக்கும் நண்பர்களும், குடும்பத்தினரும்கூட இந்த நாளை கொண்டாடவுள்ளனர்.

ஆனால், இதே காதலர் தினத்தில் தங்களது குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த 40க்கு மேற்பட்டோரின் குடும்பம் கடந்த ஓராண்டாக மீளாத் துயரிலிருந்து வருகிறது. ஆம்… ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டாகிறது.

தங்களது உயிரைப் பணயம் வைத்து நாட்டைப் பாதுகாக்க எல்லையில் போராடும் ராணுவ வீரர்கள் அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் சமயங்களில் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு விடுமுறைக்குச் சென்று விட்டு சுமார் 2,547 துணை ராணுவ வீரர்கள் 76 வாகனங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் மோதி வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

**உயிரிழந்தவர்களின் விவரங்கள்**

*உத்தரப் பிரதேசம்*

கான்ஸ்டபிள் மகேஷ் குமார், பிரதீப் குமார், கவுசல் குமார் ராவத், பிரதீப் சிங்,

ஷ்யாம் பாபு, பங்கஜ் குமார் திரிபாதி, அஜித் குமார் ஆசாத், அமித் குமார் விஜய் கர் முர்யா, ரமேஷ் யாதவ், தலைமை கான்ஸ்டபிள் ராம் வகீல், ஆவ்தேஷ் குமார் யாதவ்.

*ஜம்மு காஷ்மீர்*

தலைமை கான்ஸ்டபிள் நசீர் அஹ்மத்

*பஞ்சாப்*

கான்ஸ்டபிள் சுகிஜிந்தர் சிங், மனிந்தர் சிங் அட்ரி, குல்வீந்தர் சிங், தலைமை கான்ஸ்டபிள் ஜமால் சிங்

*ராஜஸ்தான்*

கான்ஸ்டபிள் ரோகிதஷ் லம்பா, பாகிராத் சிங், ஜீத் ராம், தலைமை கான்ஸ்டபிள் நாராயண் லால் குர்ஜர், ஹெம்ராஜ் மீனா.

*இமாச்சலப் பிரதேசம்*

கான்ஸ்டபிள் திலக் ராஜ்

* ஜார்கண்ட்*

தலைமை கான்ஸ்டபிள் விஜய் சோரங்

*கேரளம்*

கான்ஸ்டபிள் வசந்த குமார்

*தமிழ்நாடு*

கான்ஸ்டபிள் சுப்பிரமணியம் (தூத்துக்குடி), சிவச்சந்திரன் (அரியலூர்)

*ஒடிசா*

கான்ஸ்டபிள் மனோஜ் குமார் பெஹரா, தலைமை கான்ஸ்டபிள் பி.கே சஹூ

*கர்நாடகம்*

கான்ஸ்டபிள் ஜிடி குரு

*மகாராஷ்டிரம்*

தலைமை கான்ஸ்டபிள் சஞ்சய் ராஜ்புட், கான்ஸ்டபிள் நிதின் சிவாஜி ரத்தோட்

*மேற்கு வங்கம்*

தலைமை கான்ஸ்டபிள் பப்லு சாத்ரா, கான்ஸ்டபிள் சுதிப் பிஸ்வாஸ்

* மத்தியப் பிரதேசம்*

கான்ஸ்டபிள் அஷ்வினி குமார், உதவி துணை இன்ஸ்பெக்டர் மோகன் லால்

*உத்தராகண்ட்*

கான்ஸ்டபிள் விரேந்திர சிங்

*பிகார்*

கான்ஸ்டபிள் ரத்தன் குமார் தாகூர், தலைமை கான்ஸ்டபிள் சஞ்சய் குமார் சின்ஹா

*அசாம்*

தலைமை கான்ஸ்டபிள் மானேஸ்வர் பிசுமத்ரி

நாட்டுக்காக தங்களது இன்னுயிரை நீத்த தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ட்விட்டரில் பலர் இன்று கறுப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் #PulwamaAttack, #IndianArmy, #BlackDayஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதற்குப் பின்னர்தான் #ValentinesDay2020 என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த வீரர்களின் நினைவாக ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நினைவுச் சின்னம் கட்டப்பட்டு வரும் நிலையில் இதற்காக புல்வாமா தியாகிகளின் குடியிருப்புகளில் இருந்தும் மண் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் ஜெனரல் தினேஷ் யூனியல் கூறியுள்ளார்.

முன்னதாக, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதப் பயிற்சி மையம் மீது இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

**கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *