Sரிலாக்ஸ் டைம்: புதினா ஓமப்பொடி!

Published On:

| By Balaji

தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அனைவருக்கும் பிடித்த ரிலாக்ஸ் டைமுக்கேற்ற நொறுக்குத் தீனி ஓமப்பொடி. இதை ஆரோக்கியமானதாக சாப்பிட இந்த புதினா ஓமப்பொடி உதவும்.

**எப்படிச் செய்வது?**

மிக்ஸியில் ஒரு கப் புதினா, இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் ஓமம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைத்ததை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் வெண்ணெய், அரைத்த விழுதை வடிகட்டி சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்துகொள்ளவும். முறுக்குப் பிழியும் கட்டையில் ஓமப்பொடி அச்சைப் போட்டு பிசைந்த மாவை வைத்து ஓமப்பொடியாக சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். இல்லை என்றால் ஓமப்பொடி கருகிவிடும். ஆறியவுடன் நொறுக்கி காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

**குறிப்பு**

அரைத்த விழுதை அப்படியே மாவில் பிசைந்தால் அது ஓமப்பொடி அச்சில் மாட்டிக்கொண்டு பிழிய வராது. அதனால் அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ளவும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share