விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு வைக்கோல் ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் கான்சாபுரம், அத்திகோவில், கூமாபட்டி, நெடுங்குளம், பிளவக்கல்அணை, தம்பிபட்டி, இலந்தைகுளம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கோடைக்கால அறுவடை பணியினை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்கள் மாடுகளுக்கு தீவனமாக கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கம்பம், தேனி, குமுளி, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வைக்கோல் கட்டுகளை ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை வாங்கி செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 வைக்கோல் கட்டு வரை கிடைப்பதாகவும் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
**-ராஜ்**
.