நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

public

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வரை தற்போது நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த நாவினிப்பட்டி, வடக்கு நாவினிப்பட்டி, பெருமாள்பட்டி கூத்தப்ப ன்பட்டி, கோவில்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று (மே 21) மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி நான்கு வழி சாலை அமைக்கும் இடத்தில் திரண்டனர்.
அவர்கள் நீர்நிலைகளை அழிக்காத வண்ணமும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல உரிய பாலம் மற்றும் பாதைகள் அமைக்கவும், நீர்நிலைகள் தண்ணீர் கடந்து செல்ல தேவையான பைப்புகள் அமைக்க கோரியும் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் நான்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மேலூர் காவல் துறை அளித்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சோலை முத்து தலைமையில் போலீஸாரும், நில எடுப்பு தனிப்பிரிவு தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை அமைக்கும்போது கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

**-ராஜ்-**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.