Rகிச்சன் கீர்த்தனா: இறால் மசாலா

Published On:

| By Balaji

வணிக ரீதியாக இறால் வளர்ப்பு 1970-கள் முதல் பெருகியது. பண்ணை இறால்களில் 70 சதவிகிதம் ஆசிய நாடுகளிலேயே உற்பத்தியாகின்றன. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவு இறால் தேவை உள்ளது. ஆசிய நாடுகளில் சீனாவும் தாய்லாந்தும் இறால் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் இறாலை விரும்பி சாப்பிடுபவர்கள் அநேகர். அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மசாலா வகைகளில் இந்த இறால் மசாலாவுக்குத் தனியிடம் உண்டு.

**என்ன தேவை?**

இறால் – கால் கிலோ (சுத்தம் செய்தது)

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தேங்காய்த்துருவல் – 7 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

தேங்காய்த்துருவல் மற்றும் சோம்பை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் தீயைக் குறைத்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய்க் கலவையும் சேர்த்து கலவை வற்றும் வரை நன்கு புரட்டவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு வதக்கி, இறக்கிப் பரிமாறவும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: இறால் குழம்பு](https://minnambalam.com/public/2021/03/02/1/prawn-kulambu)**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share