ரிலாக்ஸ் டைம்: பாப்கார்ன் பக்கோடா!

Published On:

| By Balaji

ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமாகிவிட்டன. ரிலாக்ஸ் டைமில் ஏதாவது செய்து கொடு என்று விரட்டும் குழந்தைகளுக்கு, அவர்களுக்குப் பிடித்தமான இந்த பாப்கார்ன் பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாம்.

**எப்படிச் செய்வது?**

அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, இரண்டு டீஸ்பூன் அரிசி மாவு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு சேர புரட்டிக்கொள்ளவும். பின்னர் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு பாப்கார்னாக எடுத்து மாவுக் கலவையில் நன்றாக முக்கியெடுத்துப் போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share