நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. இந்த பாஸ்தாவில் உடலுக்கு ஊட்டமளிக்கும் பூசணியைச் சேர்த்து பூசணி பாஸ்தா செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்துங்கள்.
**எப்படிச் செய்வது?**
ஒரு வாணலியில் அரை கப் வெண்ணெய்விட்டு சூடாக்கி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் நான்கு சேர்த்து வதக்கவும். பின்பு அதில் இரண்டு டீஸ்பூன் மைதா சேர்த்துக் கிளறவும். பிறகு அரை கப் காய்ச்சிய பால் ஊற்றி கிளறவும். கலவை வொயிட் சாஸ் பதத்துக்கு வந்ததும் அதனுடன் வேகவைத்த பாஸ்தா ஒன்றரை கப், அரைத்த பூசணிக்காய் விழுது அரை கப், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கடைசியாக, பொடியாக நறுக்கிய குடமிளகாய் அரை கப் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
**சிறப்பு**
பூசணியை அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியைத் தக்கவைக்கும். பார்வை சிறப்பாகும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.�,