}காவல் நிலையத்தில் குவிந்து கிடக்கும் சாவிகள்!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி பிடிபட்ட வாகனங்களில் இருந்து எடுக்கப்பட்ட சாவிகள் காவல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரத்தில் தடையை மீறி சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க காவல் நிலையத்திலிருந்து அவர்களது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், வாகனங்களை திரும்ப பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் சோழவரம் காவல் நிலையத்தின் மூலையில் ஒரு இடத்தில் சாவிகள் குவிக்கப்பட்டுள்ளதையும், உரிமையாளர் ஒருவர் தன்னுடைய சாவியை தேடுவது போல் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share