கொரோனா சூழலில் சாதாரண உடல்நலக் குறைவு ஏற்பட்டால்கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. இந்த நிலையில் வயிற்று உபாதையில் அவஸ்தைப்படுபவர்கள், சிறுநீரகக் கற்கள் இருப்பவர்களுக்கு ஏற்றது இந்த வாழைத்தண்டு மோர். கற்கள் இருப்பவர்கள் தினமும் இதை சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முறை அருந்துவது போதுமானது.
**எப்படிச் செய்வது?**
ஒரு டம்ளர் வாழைத்தண்டுச் சாற்றுடன் கால் டம்ளர் மோரைக் கலந்து, ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதைப் பொடி மற்றும் தேவையான அளவு இந்துப்பு கலந்து அருந்தலாம்.
**சிறப்பு**
நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பித்தப்பையில் உள்ள கற்களைக் கரைக்க உதவும். ஊட்டச்சத்துகளைக் கிரகிக்கும்போது உருவாகும் யூரியா உள்ளிட்ட நச்சுக்களை இந்த வாழைத்தண்டு மோர் வெளியேற்றும்.
.�,