bபேச்சுலர் சமையல்: வாழைக்காய் ரோஸ்ட்!

Published On:

| By Balaji

குறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு எளிமையாகவும், விரைவாகவும் செய்யக்கூடிய சமையல், தானாக சமைத்து உண்ணும் இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

அந்த வகையில் வேலை நிமித்தமாகவும், கல்வி கற்கவும் வீட்டை விட்டும் பெற்றோரை விட்டும் வெகு தூரம் வந்து ருசியாக சாப்பிட முடியாமல் இருக்கும் பேச்சுலர்களுக்காக இந்த பேச்சுலர் சமையல். இன்றைய பகுதியில் சுவையான வாழைக்காய் ரோஸ்ட் செய்யும் முறையைப் பார்க்கலாம்.

**தேவையான பொருட்கள்:**

புழுங்கலரிசி – 1 1/2 கப்

பச்சரிசி – அரை கப்

உளுத்தம் பருப்பு – கால் கப்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

சின்ன வாழைக்காய் – ஒன்று ( தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்)

காய்ந்த மிளகாய் – 8

சீரகம் – 1 டீஸ்பூன்

பூண்டு – 8 பல்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

**செய்முறை:**

புழுங்கலரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். அதனுடன் தோல் சீவி துருவி வைத்திருக்கும் வாழைக்காய், காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து, மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விட வேண்டும். பின்னர் அதனை தோசையாக ஊற்றி எடுத்தால் சுவையான வாழைக்காய் ரோஸ்ட் தயார். தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் பொருத்தமாக இருக்கும்.

-ஆதிரை வேணுகோபால்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share