gரிலாக்ஸ் டைம்: அன்னாசி – எலுமிச்சை ஜூஸ்

Published On:

| By Balaji

காலையில் வெறும் வயிற்றிலோ, உணவுடன் சேர்த்தோ ஜூஸ் சாப்பிட விரும்பாதவர்கள் ரிலாஸ்க் டைமில் இந்த ஜூஸ் அருந்தி புத்துணர்ச்சி பெறலாம். உடல்நலம் குன்றியவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள் தினமும் இந்த ஜூஸை அருந்தலாம்.

**எப்படிச் செய்வது?**

வட்டமாக வெட்டிய நான்கு அன்னாசிப்பழத் துண்டுகளுடன், ஒரு சிறிய பழத்தின் எலுமிச்சைச்சாறு பிழிந்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். தேவைப்படுபவர்கள், ஐஸ்கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

**சிறப்பு**

வைட்டமின் சி சத்து நிறைந்த ஜூஸ் இது. இரும்புச்சத்து, சிறிதளவு பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு முதலான தாதுஉப்புகள் இதில் நிறைந்து இருக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.

**குறிப்பு**

வயிற்றுப்புண் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸை அருந்த வேண்டாம்.

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share