ரூ.90ஐ நெருங்கிய பெட்ரோல் விலை: கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!

public

பெட்ரொல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 10), சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் லிட்டருக்கு 24 காசுகளும் அதிகரித்துள்ளன. இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.89.96 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.82.90ஆகவும் உயர்ந்துள்ளது.

டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.87.60, டீசல் ரூ. 77.73 ஆகவும்,

மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.94.12, டீசல் ரூ. 84.63 ஆகவும்,

கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.88.92, டீசல் ரூ.81.31 ஆகவும்,

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.89.96 டீசல் ரூ.82.90 ஆகவும்,

பெங்களூருவில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.90.53 டீசல் ரூ.82.40 ஆகவும்,

ஹைதராபாத்தில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.91.09 டீசல் ரூ.84.79 ஆகவும்,

பாட்னாவில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.90.03 டீசல் ரூ.82.92 ஆகவும்,

ஜெய்ப்பூரில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.93.98 டீசல் ரூ.85.95 ஆகவும்,

லக்னோவில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.86.57 டீசல் ரூ.78.09 ஆகவும்,

திருவனந்தபுரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு, ரூ.89.48 டீசல் ரூ.83.60 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனா காலத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், இந்தியாவில் எரிபொருளின் விலை குறையவில்லை. இந்நிலையில், தற்போது தினசரி பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.