பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைக்கும் நடைமுறை தற்போது அமலில் இருந்து வருகிறது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் டீசல் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளன. அதன்படி இன்று டெல்லி மற்றும் கொல்கத்தாவில் டீசல் விலை லிட்டருக்கு 20 பைசாவும் மும்பை மற்றும் சென்னையில் லிட்டருக்கு 21 பைசாவும் உயர்ந்துள்ளது.
இந்திய ஆயில் நிறுவனம் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) இணையதளத்தில் உள்ளபடி, டீசல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ. 66.54 ஆக உயர்ந்தது, கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ. 68.95 ஆகவும் மும்பையில் லிட்டருக்கு 69.80 ரூபாயும், சென்னையில் லிட்டருக்கு. 70.34 ரூபாயும் உயர்ந்துள்ளது.
டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் விலை நிலையாக இருக்கிறது. அதன்படி டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பெட்ரோல் விலை முறையே லிட்டருக்கு. ரூ.74.63, ரூ.77.29,ரூ.80.29 மற்றும் ரூ. 77.58 ஆக உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த 5 நாட்களாக பெட்ரோல் விலை மாற்றமில்லாமல் இருக்கிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வப்போது சிறிதளவு குறையும் டீசல் விலை பின்னர் இதுபோன்று தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் பொதுமக்கள் சிரமத்தைச் சந்திக்க நேரிடுகிறது.
�,