கடந்த சில நாட்களாக பெட்ரொல் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து 10ஆவது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது.
இதனால் ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து இன்று மத்தியப் பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை நிர்ணயப்படி இன்று (பிப்ரவரி 18) பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 பைசா மற்றும் டீசல் 32 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
பிராண்டட் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவை மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று 100 ரூபாயைக் கடந்துள்ளது. ஆனால், ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மற்றும் மத்தியப் பிரதேச்தில் சாதாரண பெட்ரோல் விலையே லிட்டர் 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம், அனுப்பூர் பகுதியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.25 ஆகவும், டீசல் ரூ.90.35 ஆகவும் விற்பனையாகிறது. இந்த 10 நாட்களில், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2.93 ரூபாயும் , டீசல் ஒரு லிட்டர் 3.14 ரூபாயும் உயர்ந்துள்ளது. வாட் மற்றும் சரக்குக் கட்டணங்கள் போன்ற உள்ளூர் வரியைப் பொறுத்து எரிபொருள் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 33%வாட் வரி, 1% செஸ் விதிக்கப்படுகிறது. டீசல் மீது 23%வரி, 1% செஸ் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல் டீசல் விலை ரூ.100 ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
**-பிரியா**�,