தமிழக வளர்ச்சிக்காக அன்பழகனின் பணி ….: ஆளுநர் இரங்கல்!

Published On:

| By Balaji

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவையடுத்து மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பேராசிரியர் அன்பழகனின் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு என்று தெரிவித்திருந்தார். பேராசிரியரின் மறைவு வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அன்பழகனின் இழப்பு, திமுகவுக்குப் பேரிழப்பு என்றும் அவரை இழந்து வாடும் கட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “மூத்த அரசியல்வாதியான பேராசிரியர் அன்பழகனின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அன்பழகன் ஆற்றிய பணிகளை மறக்க முடியாது. அவரின் மறைவு தமிழகத்திற்கும், திமுகவிற்கும் பேரிழப்பு” என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share