Xகருவாடு வாங்க பொதுமக்கள் ஆர்வம்!

Published On:

| By Balaji

தற்போது வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனுடன் சேர்த்து கருவாடும் விற்பனை செய்யப்படுவதைத் தொடர்ந்து கருவாடு வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் திறக்க அனுமதி இல்லை.

பொதுமக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வாகனங்களில் காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஊரடங்கு நேரத்தில் இறைச்சி, மீன் சாப்பிட முடியாமல் அசைவ பிரியர்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனுடன் சேர்த்து கருவாடும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அந்த கருவாடை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

குறிப்பாக கோவை கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதியில் விற்கப்பட்ட நெத்திலி, வாளை, மத்தி உள்பட பல்வேறு வகையான கருவாடு விற்பனை செய்யப்பட்டது. அதை பலர் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இறைச்சி மற்றும் மீன் இல்லாத குறையை கருவாடு நிவர்த்தி செய்கிறது. மேலும் இறைச்சியை அன்றே சமையல் செய்து சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் கருவாடை தேவைப்படும் பொழுது சமையல் செய்து கொள்ளலாம் என்றனர்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share