mகட்சிக்கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஈரோட்டில் கட்சிக்கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது தேர்தலில் கூட்டணி வியூகம் அமைக்கும் பணிகள் அரசியல் கட்சியினரிடையே தொடங்கப்பட்டுள்ளன. பிரபல கட்சிகளுடன் எந்தக் கட்சிகள் கூட்டணி அமையும் என்கிற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இப்போதே கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் இடங்களிலும் வழிநெடுகிலும் கட்சிக்கொடிகள் கட்டப்படுகின்றன. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிக்கொடிகள் தேவை அதிகமாக இருக்கும் என்பதால், அதை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக, ஜவுளி மாநகரமாக திகழும் ஈரோட்டில் கட்சிக்கொடிகளைத் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் கடைகளில் கட்சிக்கொடிகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கட்சிக்கொடிகளைத் தயாரிக்கும் ஒருவர், தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு கட்சிக்கொடிகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் அதிகமாக கட்சிக்கொடிகள் விற்பனை செய்யப்படும் என்பதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சிக்கொடிகளைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கி விட்டோம். தயாரிக்கப்பட்ட கட்சிக்கொடிகளை விற்பனைக்காக வைத்துள்ளோம்.

அதிமுக, திமுக ஆகிய கட்சிக்கொடிகளை அதிகமாக தயார் செய்வோம். இந்த கொடிகள்தான் அதிக அளவில் விற்பனையாகும். மேலும், பாஜக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிக்கொடிகளையும் தயாரிக்கிறோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் தேர்தல் பிரச்சாரம் இன்னும் சூடுபிடிக்க தொடங்கப்படவில்லை. இப்போது ஆர்டர் குறைவாக உள்ளது. அதேநேரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு பிரச்சாரம் தீவிரமாக இருக்கும். அப்போது கட்சிக்கொடிகள் அதிகமாக விற்பனையாகும். இதற்காக கட்சிக்கொடிகளை அதிகமாக தயாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share