ஈரப்பதமான சூழலில் ரிலாக்ஸ் டைமில் டீ, காபிக்கு பதிலாக சூடான சூப் குடிக்க வேண்டும் நினைப்பவர்களுக்கு ஏற்றது, சத்தான இந்த பனீர் சூப்.
**எப்படிச் செய்வது?**
வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, கால் கப் பனீரைப் பொரித்துத் தனியே வைக்கவும். ஒரு கப் வெந்நீரில் மூன்று தக்காளிகளைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, தோலை உரித்து மிக்ஸியில் அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் சோளமாவைக் கரைத்து, தேவையான அளவு உப்பு, தக்காளி அரைத்த விழுதினையும் சேர்த்துக் கலக்கி அடுப்பிலேற்றி, ஒரு கொதிவிடவும். கொதித்ததும் இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள் தூவி இறக்கி ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய மல்லித்தழையைக் கலந்துவிடவும். பரிமாறும் முன் பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறவும்.
**சிறப்பு**
புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பாதிக்காது என்பதால், நீரிழிவாளர்களும் எடுத்துக்கொள்ளலாம். வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. செரிமானத்துக்கு நல்லது.
�,