�‘ருசிக்கு ருசி, சத்துக்குச் சத்து’ என்று சிறந்து விளங்கும் உணவு வகைகளில் பால் மற்றும் பால் பொருள்களுக்குத் தனி இடம் உண்டு. அவற்றில் முக்கிய இடம் பிடிப்பது பனீர். உடல்நலத்துக்குப் பாதுகாவலனாக விளங்கும் பொருட்களுடன் பனீரையும் சேர்த்துச் சுவையான இந்த சாலட் செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
**எப்படிச் செய்வது?**
ஒரு பானில் (Pan) தேவையான அளவு எண்ணெய்விட்டு சதுரமாக நறுக்கிய 200 கிராம் பனீர் துண்டுகளைச் சேர்த்து லேசாகப் பொரிக்கவும். அதே பானில் நீளமாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, நறுக்கிய குடமிளகாய் அரை கப், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிவிட்டு இறக்கவும். இதனுடன் பொரித்துவைத்துள்ள பனீர் துண்டுகள், எலுமிச்சைச்சாறு ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் தலா அரை டீஸ்பூன் சேர்க்கவும். பிறகு, கொத்தமல்லித்தழை சிறிதளவு சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.
**சிறப்பு**
100 கிராம் பனீரில் 20.8 கிராம் கொழுப்புச்சத்தும் 1.2 கிராம் மாவுச்சத்தும் உள்ளது. எலும்பு உறுதிக்கு உறுதுணை புரியும் கால்சியம், உடல் இயக்கத்துக்கு அவசியமான புரோட்டீன் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளன பனீர்.
�,