இத்தாலி உணவு வகைகளில் ஒன்றான பாஸ்தா, இன்று நம் வீட்டு குழந்தைகளின் பேவரைட் உணவாகிவிட்டது. நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சத்தான இந்த பனீர் – பைனாப்பிள் பாஸ்தா சாப்பிட்டு உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.
**எப்படிச் செய்வது?**
100 கிராம் பாஸ்தாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு நீரை வடிக்கவும். 50 கிராம் பனீரை சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் இரண்டு டீஸ்பூன் வெண்ணெயைச் சூடாக்கி, பொடியாக நறுக்கிய அரை கப் வெங்காயம், பொடியாக நறுக்கிய அரை கப் குடமிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய ஒரு கப் பைனாப்பிள், பனீர் சேர்த்து வதக்கவும். பிறகு அரை கப் பால், வெந்த பாஸ்தா, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிவந்ததும் இறக்கி பரிமாறவும்.
**சிறப்பு**
இரண்டு வயது முதல் 70 வயதினர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகிவிடும். பாஸ்தாவுடன் அதிக அளவில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும்போது, அதன் பலன்களும் கூடும்.
�,