Lபல்லாவரம் பின் கோடு மாற்றம்!

Published On:

| By Balaji

சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் நகராட்சியின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கான அஞ்சல் குறியீட்டு எண் (பின் கோடு) மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண தபால், மணியார்டர் ஆகியவற்றை விரைவாக பட்டுவாடா செய்வதற்கு ஏற்ற வகையில் பல்லாவரம் பகுதிகளின் அதிகார வரம்பும், அஞ்சல் குறியீட்டு எண்ணும் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை நகர தெற்கு வட்டார அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பல்லாவரத்தில் கிருஷ்ணா நகர் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, ராஜராஜேஸ்வரி அவின்யு, ரெயின்போ காலனி முதல் மற்றும் 2-வது தெரு, கங்கா தெரு, சாமிநாதன் தெரு ஆகிய பகுதிகளின் அஞ்சல் பட்டுவாடா, பழைய பல்லாவரம் – 600 117 அஞ்சலகத்தால் இதுவரை செய்யப்பட்டு வந்தது என்றும், இந்தப் பகுதிகளுக்கான அஞ்சல் பட்டுவாடாவை இம்மாதம் 13-ந் தேதியிலிருந்து மடிப்பாக்கம் (600091) அஞ்சலகம் செய்ய உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட பகுதிவாழ் பொதுமக்கள் இனி 600091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்து வேண்டுகிறோம்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share