�வட இந்தியர்களால் பெரிதும் விரும்பப்படும் பாலக்கீரை வீட்டில் வளர்க்க ஏற்றது. இப்போது தென்னிந்தியாவிலும் பரவலாகக் கிடைக்கிறது. நீரிழிவாளர்களுக்கு மிகவும் சிறந்தது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த பாலக் சூப் உதவும்.
**எப்படிச் செய்வது?**
ஒரு வாணலியில் தண்ணீர்விட்டு ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் ஒன்று, தக்காளி இரண்டு, பச்சை மிளகாய் ஒன்று, நசுக்கிய பூண்டுப் பற்கள் இரண்டு, சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும். இதில் ஒரு கட்டு நன்கு சுத்தம் செய்து நறுக்கிய பாலக் கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு வாணலியில் அரைத்த கலவையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு வெண்ணெய் சேர்த்துப் பரிமாறினால் சூப்பரான பாலக் கீரை சூப் தயார்.
**சிறப்பு**
பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. மேலும் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவும்.
�,