தினப் பெட்டகம் – 10 (17.11.2018)
இன்று சர்வதேச மாணவர்கள் தினம் (International Students Day)
1. லக்னோவிலுள்ள City Montessori Schoolதான், மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக்கூடம். இங்குள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 32,000.
2. உலகிலேயே சீனா நாட்டில்தான் அதிகமான வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு சராசரியாக 14 மணிநேரங்களை ஒரு நபர் வீட்டுப் பாடத்தில் செலவிடுகிறார்.
3. பாகிஸ்தான் நாட்டில் குழந்தைகளுக்கு கல்விக்கான உரிமை வழங்கப்படவில்லை. 5-9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4. சிலே (Chile) நாட்டில், கோடை விடுமுறை டிசம்பரின் மத்தியில் இருந்து, மார்ச் வரை நீளும். மூன்று மாதங்கள்!
5. ஃபிரான்ஸ் நாட்டில்தான் உலகிலேயே குறைவான கல்வியாண்டு, அதாவது ஆகஸ்ட் முதல் ஜூன் வரை மட்டுமே.
6. ஹோலந்து நாட்டில், ஒரு குழந்தைக்கு 4 வயதாகும் தினத்தில் பள்ளியில் சேர்க்க வேண்டும். அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தை சேரும்!
7. உலகிலேயே மிகப் பழமையான பள்ளி, இங்கிலாந்தில் உள்ள The King’s School- கி.மு.597இல் இது தொடங்கப்பட்டது.
8. ஜப்பான் நாட்டின் குழந்தைகள் தன் வேலைகளைத் தானே செய்து கொள்வார்கள். பள்ளி, கல்லூரிகளை சுத்தம் செய்வது, தன் சாப்பாட்டைத் தானே கொண்டுவருவது, சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தைச் சுத்தப்படுத்துவது என, இவ்வேலைகள் அனைத்தும், அக்குழந்தையின் பாடத்திட்டத்திலும் உள்ளன.
9. பிரேசில் நாட்டில் குடும்பத்துடன் உணவு உண்பது மிகவும் முக்கியமான கலாச்சாரமாகப் பின்பற்றப்படுகிறது. அதனால், காலை 7 மணிக்குப் பள்ளி தொடங்கி, மதியம் முடிந்துவிடும்.
10. உலகிலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்குவதற்கான ஏற்பாட்டுடன் கூடிய பல்கலைக்கழகமாக முதன்முதலில் நிறுவப்பட்டது, இந்தியாவிலுள்ள நாளந்தா பல்கலைக்கழகம்தான். அது மட்டுமில்லாமல், இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமும் இதுவே.
** – ஆஸிஃபா**
ஆதாரங்கள்:
https://www.scoopwhoop.com/Interesting-Facts-Education-Around-The-World/
https://www.india.com/news-travel/10-super-cool-facts-about-indian-universities-3237458/�,