வேளாண் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருப்பதால் வேலைவாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சியையே இந்தியா கொண்டுள்ளதாக மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 17ஆம் தேதி *டெல்லி ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்* பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், “முதலாவதாக, ஜிஎஸ்டி என்ற சீர்திருத்தத்தை மேற்கொண்டு சிறு மற்றும் அமைப்பு சாரா தொழில் துறையினரின் தொழில் வளர்ச்சியைச் சிதைத்துவிட்டனர். பொருளாதார வளர்ச்சியில் உள்ள சவால்கள் சமுதாய வளர்ச்சியையும் குறைக்கின்றன. வேளாண் நெருக்கடி, வேலைவாய்ப்புகளில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருக்கின்றன.
விவசாயிகள் தற்கொலை மற்றும் விவசாயிகள் போராட்டம் ஆகியவை நம் நாட்டில் பொருளாதாரக் கட்டமைப்பு சிறப்பாக இல்லை என்பதையே காட்டுகின்றன. அறிவிக்கப்படும் திட்டங்கள் யாவும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாக இல்லை. (நரேந்திர மோடியின்) இந்த அரசு வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியை மட்டும் கொண்டிருக்கவில்லை; அது வேலையைப் பறிக்கும் வளர்ச்சியை கொண்டுள்ளது. தொழில் துறையில் போதிய வளர்ச்சி இல்லததால், அத்துறையில் வேலைவாய்ப்புகளை உயர்த்தும் முயற்சிகள் தோல்வியையே சந்திக்கின்றன” என்றார்.�,