e
வேலூர் சந்தையில் முன்னெப்போதும் அல்லாத அளவிற்குப் பச்சை மிளகாய் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வேலூர் சந்தையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவை அதிகளவில் பிற மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் பச்சை மிளகாயில் அதிகளவில் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பயிரிடப்படுகின்றது. தமிழ்நாட்டில் வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பச்சை மிளகாய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் விலை சரிந்துள்ளது. இதுகுறித்து தினகரன் ஊடகத்திடம் வேலூர் சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில், ”வேலூர் சந்தையில் பச்சை மிளகாய் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.20 ஆக விற்பனையானது. நேற்று முன்தினம் கிலோ ஒன்று ரூ.10 ஆகவும், தற்போது பச்சை மிளகாயின் வரத்து அதிகமாகி கிலோ ஒன்று ரூ.5 ஆகவும் விற்பனையாகின்றது” எனத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காய்கறிகளின் வரத்து அதிகமானதால் விலை குறைந்துள்ளது.காய்கறிகளின் விலை (கிலோ ஒன்றுக்கு), பீட்ரூட் ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.5, கத்தரிக்காய் ரூ10, கேரட் ரூ.13 ஆகக் குறைந்துள்ளது.�,