விக்ரம் பிரபு நடிக்கும் அசுரகுரு படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம், கதைக்களம் பற்றி அதன் இயக்குநர் கூறியுள்ளார்.
சாட்டை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மஹிமா நம்பியார். குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்குகிறார்.
“படத்தின் நாயகன் ஒரு திருடன். சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த பணத்தை ஒருவரிடமிருந்து திருடுகிறான். அவனை பிடிக்க அந்த நபர் தனியார் துப்பறியும் நிபுணர்களை அணுகுகிறார். துப்பறியும் நிறுவனம் தங்களது சிறந்த நிபுணரான ஒரு பெண்ணை அனுப்புகிறது. அப்போது அதற்கு முன் கதாநாயகன் அரசிடமிருந்தும், காவல் நிலையத்திலிருந்தும் திருடியிருப்பது தெரிகிறது” என்று கதை பயணிக்கும் பாதையை கோடிட்டு காட்டியுள்ளார் ராஜ்தீப்.
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு இதற்கு முன்னதாக துப்பாக்கி முனை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது இந்தப் படத்தில் திருடனாக வலம் வரவுள்ளார். மஹிமா துப்பறியும் நிபுணராக நடிக்க காவல்துறை அதிகாரியாக சுப்பாராஜு நடிக்கிறார்.
ரேனிகுண்டா படத்திற்கு இசையமைத்த கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். யோகி பாபு, ராமதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
**
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
.
�,”