வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று (ஆகஸ்ட்,22) முதல் 26ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக 26ஆம் தேதி தொலைதூரப் பகுதிகளில் பெருமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 2செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
�,