நம்ம டீக்கடை பையனுக்கு டெக்னாலஜிலாம் அதிகம் தெரியாது. எதைப்பத்தி கேக்கனும்னாலும் நம்மகிட்டதான் வருவான். இந்த பிளாஸ்டிக் அரிசி விஷயமா வாட்ஸப்ல வந்ததுபத்தி கேள்விகேட்டான். ஒரு பஜ்ஜியை எடுத்து ஃபோட்டோ புடிச்சு, இது பிளாஸ்டிக் பஜ்ஜினு தலைப்பு வெச்சு அனுப்பிட்டேன். ரெண்டு நாள்ல இந்த மெஸேஜ் உனக்கு திரும்ப வரலைன்னா வாட்ஸப்ல வர்றதெல்லாம் உண்மை. வந்துருச்சுன்னா எல்லாமே பொய். நீயே தெரிஞ்சிக்கனு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா, விஷயம் தெரிஞ்சு ஓனர் வேலையைவிட்டு அனுப்பிட்டா கடன் குடுக்க ஆள் இருக்காதேன்னு இப்பதான் யோசனையா இருக்கு. அடுத்து ஒரு மெஸேஜ் பஜ்ஜி வதந்தி பொய்ன்னு அனுப்பிட்டு வந்துட்றேன். அப்டேட்டைப் பாத்து வைங்க.
Thippu Sulthan K
போனுல சென்சார் வேலை செய்யலையாம்..
A” சர்டிபிகேட்டா இருந்தாலும் பரவால்ல பாத்து குடுக்க சொல்லிருக்கேன்
**Rubini Rubi**
ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடியை ஏற்றியே தீருவோம்- தமிழிசை
என்னத்தனாலும் ஏத்து… ஆனா கேக்கை கீக்கை வெட்டிராதக்கா சம்பவம் ஆய்ரும்
**Nahubar Ali**
என்னமோ பிளாஸ்டிக் அரிசி அரிசின்னு போஸ்ட் போட்டுட்டு இருக்காங்கே..கடைல வாங்குறப்ப பிளாஸ்டிக் இல்லாத அரிசி குடு ன்னு கேட்டு வாங்குனா போச்சி..
**Rubini Rubi**
என்னை கொலை செய்ய முயல்கிறார்கள் – ஜெ.தீபா
அட கெரகமே…முழிச்சுத் தொலை..????எப்ப பாரு தூக்கம்????
**ES Shiva**
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் வின்னிங் ஷாட்டாக சிக்ஸ் அடிக்கும் வரைக்கும் தோனியின் புகழ் நீடித்திருக்கும்..
**Shahul Hameed**
விவசாயத்தை காப்பாத்தனும்னா வாட்சப்ல பொண்ணுங்க கூட கடலை வறுக்க கூடாது காலையில மம்பட்டிய தூக்கிட்டு வயலுக்குப் போயி #களை புடுங்கனும்..
**Abdul Vahab**
எனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து இப்ப வர ப்ளாஸ்டிக் அரிசியதான் சாப்பிட்டு வரேன் சோறா வடகமானு வித்தியாசம் தெரியாம.
**சித்தன் ஆனந்த்குமார்**
தீபா புருஷனை பார்க்கையில் ..
நம்ம நிலைமை எவ்வளவோ தேவலை என்பதே பல ஆண்களின் மன ஓட்டமாக இருக்கும்
**Jo Dave**
பால் தராத மாடுகளை விற்பதும் கொல்வதும் மிகபெரிய தவறு. அது பல லட்ச இந்துக்களின் மனதை காயபடுத்துகிறது. – கு(ரூர)ரு மூர்த்தி.
அண்ணன் மண்டைல இருக்குற தேவையில்லாத மயிரைக்கூட வெட்டி மடியில கட்டிட்டுதான் அலைவாரு போல…
**Sarva Bhouman**
2000 ரூ நோட்டுகளை ரெண்டாக் கிழிச்சு அது பிளாஸ்டிக் இல்லைன்னு கன்ஃபர்ம் பண்ணிக்கவும். ????
**Manoj Pandian**
ஊருக்குள்ள இப்பவும் பத்து பேர் இன்ஜினியரிங் படிக்க அப்ளிகேஷன் போட்டுட்டு வந்துருக்கானுக..
**Mani – Blr**
நீ லைக் போட்டா தான் நான் லைக்
போடுவேன்னா நீங்க பிரபலம்
நீ லைக் போடலன்னாலும் நான் லைக்
போடுவேன்னா நீங்க நண்பன்
**Pasamudan Pradeep**
ரொம்ப நேரம் ஏன் ஆன்லைன்ல இருக்கிற ன்னு கேக்கிறவங்க மேல கடுப்பு ஆகாதீங்க நம்ம மேல அவங்களுகாது அக்கரை இருக்கேனு சந்தோஷா படுங்க
**Hansa Hansa**
சோறு பசியுடன் காத்திருக்கிறது.
*பணக்கார வியாதியஸ்தன் வீட்டில்…
**PM Krishnan**
தமிழிசை மேடம்
உங்க கையில வாங்கி கேக் சாப்பிடுறதவிட!
நாங்க பிளாஸ்டிக் அரிசி சாப்பிட்டுட்டே சாவுறோம் விடுங்க !!..
**Chozha Rajan**
1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களை மராட்டிய அரசு தள்ளுபடி செய்துள்ளது…
அங்கு சாத்தியமாகும் விஷயத்தை தமிழக அரசால் ஏன் முடியவில்லை…?
இதுக்குப் பேர்தான் கையாலாகாத அரசா?
**Ahmed Fayas**
இம்முறை சாம்பியன்ஸ் ட்ரொபியில் வரலாற்றை மாற்றி எழுதிய கிரிக்கெட்டின் மூவேந்தர்களின் மூன்று முக்கிய டக் அவுட்டுக்கள்.
* லெஜண்ட் ஏபிடி vs Pakistan
*லெஜண்ட் கோலி vs srilanka.
* லெஜண்ட் சந்திமால் vs Pakistan.
**Sankara Subra Manian**
ஏண்டி கவலையா இருக்கே ?
ஒன்னும் இல்லேடி…
என் பையன் ரகு ஸ்கூலுக்குப்போய் மூணு மாசமாகுது..
ஏன் என்ன ஆச்சு … ?
மூணு மாசம் முன்னாடி அவன் காணாம போனான்…. என் வீட்டுக்காரர் அவன்
ஃபோட்டோவோட வாட்ஸ்ஆப்ல மெஸேஜ் போட்டார். மறுநாளே அவனை கண்டுபிடித்து வீட்டில் கொண்டுவந்து சேர்த்துட்டாங்க…
வாவ்… உண்மையிலேயே வாட்ஸ்ஆப் எவ்வளவு உபயோகம் !!!!
இப்போ அதேதான் பிரச்சனையாயிடுத்து…
அவனால ஸ்கூலுக்கு போக முடியல்ல….
அவன் வெளியே போனாலே யாராவது அவனைப் பிடிச்சு வீட்டில் கொண்டு விட்டுடராங்க…. அந்த வாட்ஸ்ஆப் மெஸேஜ் இன்னும் ரவுண்டு வந்துண்டு இருக்கு…. நிறுத்த முடியல்ல….!
-லாக் ஆஃப்.�,”