கடந்த வாரம் நடைபெற்ற இந்தியன் ஓபன் பேட்மின்டன் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் சாய்னா மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் நேற்று நடைபெற்ற மலேசிய ஓபன் பேட்மின்டன் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறினர். மலேசியன் ஓபன் பேட்மின்டன் தொடர் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் முன்னணி வீரர்களான பி.வி.சிந்து, சாய்னா நேவால் இருவரும் முதல் சுற்றில் சீன வீராங்கனை சென் யூபியு மற்றும் ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை சாய்னா எதிர்கொண்டனர்.
இதில் சாய்னா 21-19, 13-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். அதேபோல் சீன வீராங்கனை சென் யூபியிடம் 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் பிவி.சிந்துவும் தனது வெற்றியைப் பறிகொடுத்தார். இருப்பினும் இந்தியாவின் அஜய் ஜெயராம் சீன வீரர் குயன் பின்னை 21-11, 21-8 என்ற நேர் செட்டில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் முதலிடம் பெற்ற வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
�,