pபெப்சி அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம்!

public

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சி அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாகவே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. நடிகர் ஆர்.கே.சுரேஷ் தற்போது நடிக்கும் ‘பில்லா பாண்டி’ என்ற திரைப்பட படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதில் தயாரிப்பாளர்களை மிரட்டிக் கூடுதல் சம்பளம் கேட்டு பெப்சி தொழிலாளர்கள் பிரச்சனை செய்வதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி அமைப்புக்கும் இடையில் ஜூலை 25 ஆம் தேதி சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சனை தொடர்பாக இன்று (ஜூலை 30) பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி [அறிக்கை](http://minnambalam.com/k/2017/07/30/1501398262) ஒன்றை வெளியிட்டார். அதில் பில்லா பாண்டி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் சங்கங்களில் உள்ள சிலர் செய்த தவறுக்கு தமிழ் திரையுலகமே பாதிக்கப்படுவது நல்லதல்ல என்றும் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கைக்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில் இன்று மாலை சென்னை வடபழனியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, “பில்லா பாண்டி படப்பிடிப்பை நிறுத்தியது தவறு தான். அதற்கு வருத்தமும் தெரிவித்துள்ளோம். ஆனால் அதைப்போன்று பல படங்களின் பிரச்சனையை பேசியே முடித்துள்ளோம். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஊதியத்தை தர மறுப்பது நியாயம் அல்ல. பெப்சி அமைப்பில் 25,000 உறுப்பினர்கள் உள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்ட ஊதியத்தை தராவிட்டால் ஆகஸ்ட் 1 முதல் பெப்சி அமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவல்ல” என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *