PUBG வீடியோகேம் மற்றும் அதைத் தொடர்ந்து பல சர்ச்சைகளை இந்திய நாடு சந்தித்து வரும் வேளையில், PUBG Mobile India என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின்கள் சேர்ந்து, அந்த பேஜின் மூலமாகக் கிடைத்த வருமானத்திலிருந்து 500 ரூபாய் பணத்தை புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியாக அளித்துள்ளனர்.
கடந்த வாரம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியான இராணுவ வீரர்களின் குடும்பத்துக்காக, இந்தியா முழுவதிலிருந்தும் பலரும் நிதியுதவி அளித்துவருகின்றனர். இந்திய நாட்டிற்காக உயிரிழந்தவர்களின் இழப்பை, தங்கள் வீட்டு இழப்பாகவே நினைத்து எவ்வித பாரபட்சமுமின்றி இந்திய மக்கள் நிதியுதவிகளை அளித்துவருகின்றனர். இந்தநிலையில், மிகப்பெரும் விமர்சனத்துக்குள்ளான PUBG கேம் விளையாடுபவர்களை ஒன்று சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட PUBG Mobile India என்ற பக்கத்தின் அட்மின்கள் சேர்ந்து, அந்தப் பக்கத்தில் வெளியிடப்படும் வீடியோக்களின் மூலம் பெறப்பட்ட தொகையின் ஒரு பகுதியான 500 ரூபாயை அனுப்பியிருக்கின்றனர்.
இந்திய PUBG கேமர்களில் மிகப் பிரபலமான நமன் மது(கேம் பெயர்: மார்டல்-MORTAL), PUBG விளையாடி அதை யூடியூபில் ஒளிபரப்புவதன் மூலம் சம்பாதித்த தொகையிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாயை நிதியுதவியாக அளித்திருக்கிறார். மேலும், தொடர்ந்து 24 மணிநேரம் PUBG கேமினை விளையாடி, அதன்மூலம் வரும் பணத்தையும் நிதியுதவியாக அளிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.�,