இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையால் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.430 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்ற பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானங்களைத் தனது வான்வெளியில் அனுமதிக்கப் பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் மாற்றுப் பாதைகளில் பிற நாடுகளுக்குப் பறக்க வேண்டியதாக இருந்தது. இதனால் பயண நேரம் அதிகமானதோடு, செலவுகளும் அதிகரித்தன. இந்நிலையில் 140 நாட்கள் கழித்து இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜூலை 16ஆம் தேதி பாகிஸ்தான் அரசு நீக்கியது. தடை விதிக்கப்பட்டிருந்த நான்கு மாதங்களில் மட்டும் அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.430 கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 17ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் புரி, அளித்துள்ள பதிலில், “ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக அந்நிறுவனத்தை வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவுகளில் விமான எரிபொருளுக்கான செலவு மட்டுமே 40 சதவிகிதமாக இருக்கிறது. இதோடு, பாகிஸ்தான் வான்வெளித் தடையால் இழப்புகள் இன்னும் அதிகரித்துவிட்டன. பாகிஸ்தான் தடை விதித்திருந்த நான்கு மாதங்களில் மட்டும் ஏர் இந்தியாவுக்கு ரூ.430 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அத்தடை நீக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு முடிவில் ஏர் இந்தியாவுக்கு ரூ.74 கோடி வரையில் இழப்பு இருக்கும் எனவும் அவர் தனது பதிலில் கூறியிருந்தார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”