இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பழைய கார்களுக்கான விற்பனை 2018-19ஆம் ஆண்டில் 12 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.
பல்வேறு அம்சங்களில் புதிய மாடல்களில் கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களுக்கு மக்களிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. தரமான விலை குறைந்த இந்த வாகனங்களை நடுத்தர மக்களும் எளிதாக வாங்க முடிவதால் இக்கார்களுக்கான விற்பனை சிறப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.5.3 லட்சம் கோடியாக இருந்த பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தை மதிப்பு இப்போது ரூ.6.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 12 சதவிகித வளர்ச்சியாகும். விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் புதிய கார்களுக்கான விற்பனையை விட 2 சதவிகிதம் கூடுதலான அளவில் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
புதிய கார்களுக்கான விற்பனை ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 18.4 சதவிகித சரிவைச் சந்தித்திருந்த நிலையில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனை 15 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. புதிய கார்களுக்கான விற்பனைச் சந்தையில் கார்களின் எண்ணிக்கை 30 லட்சமாக மட்டுமே இருக்கும் நிலையில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனைச் சந்தையில் இதன் எண்ணிக்கை 48 லட்சமாக இருக்கிறது. புதிய கார்களுக்கான விலையை விடப் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விலை 30 முதல் 40 சதவிகிதம் வரையில் குறைவாக இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தையில் மகிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ், டுரூம், ஓ.எல்.எக்ஸ். ஆகிய நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.
கார்களை வைத்திருப்பவர்கள் அக்கார்களைக் கொடுத்துவிட்ட பயன்படுத்தப்பட்ட வேறு கார்களை வாங்கும் பழக்கமும் தற்போது அதிகரித்து வருவதாக மகிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அசுடோஷ் பாண்டே *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”