pபணப்பரிமாற்றம்: இந்தியர்களின் விருப்பம்!

Published On:

| By Balaji

ஏடிஎம்களில் பணம் எடுத்துப் பயன்படுத்துவதை விட, டெபிட் கார்டுகளை நேரடியாக ஸ்வைப்பிங் எந்திரங்களில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மார்ச் மாதத்துக்கான ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் ஏடிஎம் பரிவர்த்தனைகள் மிக மந்தமாக 15 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளன. அதேநேரம், டெபிட் கார்டுகள் வாயிலாக ஸ்வைப்பிங் மெஷின்களில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளன. எண்ணிக்கை வாரியாகப் பார்த்தால், ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு ஏடிஎம் எந்திரங்களில் மக்கள் 89.10 கோடி முறை பணம் எடுத்துள்ளனர். 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 77.50 கோடியாக மட்டுமே இருந்தது.

அதேபோல, 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஸ்வைப்பிங் மெஷின்களில் ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு மொத்தம் 31.80 பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் மொத்தம் 40.70 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. கிரெடிட் கார்டுகளைக் கொண்டு ஸ்வைப்பிங் மெஷின்களில் மேற்கொண்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 12.70 கோடியிலிருந்து 16.20 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்போது 2.02 லட்சம் ஏடிஎம் ஏந்திரங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் 1.9 லட்சமாகவும், 2017ஆம் ஆண்டில் 2.08 லட்சமாகவும், 2018ஆம் ஆண்டில் 2.07 லட்சமாகவும் இருந்தது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share